அரசு மருத்துவரை தாக்கியதாக திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பேட்டை சிவா கைது செய்யப்பட்டுள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார துறை மூலம் மலேரியா தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டன இதனை உட்கொண்ட, பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 8 பேருக்கு கடந்த 29 ஆம் தேதி வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதை கேட்டறிய சென்ற பாஜக தலைவர் பேட்டை சிவா, அங்கு பணியில் இருந்த அரசு மருத்துவர் அரவிந்த் என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மருத்துவரை பேட்டை சிவாவுடன் வந்த அவரது ஆதரவாளர்கள் தாக்கினர்.
இதுகுறித்து அரவிந்தன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து பேட்டை கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் மற்றும் பிரபாகரன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து பாஜக மாவட்டத் தலைவர் பேட்டை சிவாவை இன்று போலீசார் கைது செய்தனர்.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்