‘ஜனவரி முதல் சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லை. வாக்களிப்பீர் தாமரைக்கு’ என்கிற விளம்பரம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. உண்மையில், ஜனவரி 1-ஆம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் இல்லை என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அது ஒரு பொய்யான விளம்பரம் என்பது தெரியவந்துள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகிவிட்டன. கட்சிகளும் கூட்டணிகளை அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ‘ஜனவரி முதல் சுங்கச்சாவடி கட்டணம் இல்லை. பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். வாக்களிப்பீர் தாமரைக்கே’ போன்ற விளம்பரம் சமூக வலைத்தளங்களில் சுற்றிச்சுற்றி வருகின்றது.
ஆனால் உண்மையில் பிரதமர் மோடி சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளாரா..? என்றால் இதுவரை இல்லை. இனிமேல் நடக்கப்போகிறதா என்றால் அதுவும் தெரியவில்லை. அப்படியிருக்க தற்போது வரை இந்த விளம்பரம் போலி செய்திதான்.
பாஜகவின் மாநில மகளிரணி செயலாளர் ஏ.ஆர். மகாலக்ஷ்மியின் சமூக வலைத்தளப்பகுதியில் இதனை பதிவிட்டுள்ளதாக பலரும் கூறி பதிவிட்டு வருகின்றனர். அந்தக் கணக்கு மகாலக்ஷ்மிக்கு உரியதுதானா என்பதும் தெரியவில்லை.
நாள்தோறும் சமூக வலைத்தளங்களில் பல செய்திகள் வலம் வருகின்றன. ஆனால் அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்தால் அவற்றில் பாதி போலி செய்தி என்பது தெரியவரும். அப்படியிருக்க, சுங்கச்சாவடி கட்டணம் இல்லை என்ற செய்தியும் தற்போது போலியாகத் தான் பரவி வருகிறது. இருந்தாலும் செய்தியின் உண்மைத் தன்மையை அறியாத பலர், இதனை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து மோடியை பாராட்டி வருகின்றனர்.
விவரம் தெரிந்தவர்கள் இது போலி செய்தி என்பதை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் சுட்டிக்காட்டி வருகின்றனர். அத்துடன், வங்கிக் கணக்கில் ரூபாய் 15 லட்சம் வரவழைக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பே இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதற்குள் மற்ற புரளியை பரப்ப ஆரம்பிவித்துவிட்டனர் என்று தங்களது கருத்துகளை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில், தற்போது வரை ஜனவரி 1-ஆம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் இல்லை என்ற செய்தி போலி செய்திதான்.
Loading More post
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
திருப்பூர்: ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது.!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்களம்.. மீண்டும் குழப்பத்தில் புதுச்சேரி.. முக்கியச் செய்திகள்!
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?