[X] Close >

நேற்று பிரான்ஸ்..இன்று தைவான் - ‘தீவிரமடையும் மஞ்சள் அங்கி போராட்டம்’

Taiwan--Thousands-of-yellow-vest-protesters-call-for-tax-reform

பிரான்ஸ் நாட்டை தொடர்ந்து தைவானிலும் மஞ்சள் அங்கி போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 


Advertisement

சுற்றுச் சூழலை காரணம்காட்டி பெட்ரோல், டீசலுக்கான வரியை பிரான்ஸ் அரசு உயர்த்தியதை அடுத்து அந்நாட்டில் போராட்டம் வெடித்தது. முதலில் இந்தப் போராட்டத்தை கார் ஓட்டுநர்கள் தான் ஆரம்பித்தனர். பின்னர், அது மக்கள் போராட்டமாக மாறியது. கார் ஓட்டுநர்கள் தொடங்கியதால், அவர்களின் மஞ்சள் அங்கியை போராட்டக்காரர்களும் அணிந்து கொண்டனர். இதனால், அது  மஞ்சள் அங்கி போராட்டம் என்று அழைக்கப்பட்டது. மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பின் தங்கிய நிலைக்கு சென்றதே போராட்டத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது.

              


Advertisement

சுமார் ஒரு மாத காலம் நீடித்த மஞ்சள் அங்கி போராட்டம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸையே ஸ்தம்பிக்க வைத்தது. போராட்டங்கள் பல இடங்களில் வன்முறையில் முடிந்தது. நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். சிலர் போராட்டத்தின் போது உயிரிழந்தனர். தொடர் போராட்டம் காரணமாக பிரான்ஸ் அரசு பணிந்தது. வரி உயர்வை ரத்து செய்வதாக அறிவித்தது. 

        

இந்நிலையில், பிரான்ஸை தொடர்ந்து தைவான் நாட்டிலும் மஞ்சள் அங்கி போராட்டம் நடைபெற்று வருகிறது. வரி குறைப்பு கோரிக்கையை முன் வைத்துதான் இந்தப் போராட்டமும் நடைபெறுகின்றது. தலைநகர் தைபேயில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 


Advertisement

        

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மஞ்சள் அங்கி அணிந்து, அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். வரி வசூல் முறைகள் சட்டவிரோதமாக உள்ளது எனும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் கையில் ஏந்தினர். இளைஞர்களுக்கு மிகவும் குறைவான சம்பளம் கிடைப்பதாக, தைவான் மக்களுக்கு இடையில் அதிக வித்தியாசம் ஏற்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். 

   

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், பிரான்ஸில் நடைபெற்ற மஞ்சள் அங்கி போராட்டத்தில் இருந்தே உத்வேகம் பெற்றதாக தெரிவித்தனர். தைவான்களின் போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close