முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம் - காங்., அதிமுக வெளிநடப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மக்களவையில் நான்கு மணி நேர விவாதத்திற்குப் பின் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. 


Advertisement

திருத்தங்களுடன் கூடிய முத்தலாக் தடை மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவின்படி, ஒரே நேரத்தில் மூன்றுமுறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய முடியும். 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்க முடியும். 

மத்திய அரசு முதலில் கொண்டு வந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் அதில் திருத்தங்களை செய்து புதிய மசோதாவாக கொண்டு வந்தது. அதன்படி, குற்றம்சாட்டப்பட்டோர் உடனடியாக ஜாமீன் பெற முடியாது என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட்டிடம் சென்று ஜாமீன் பெறலாம் எனத் திருத்தம் செய்யப்பட்டது. முத்தலாக் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்க முடியும் எனச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. 


Advertisement

         

இந்த மசோதா மீது சுமார் 4 மணி நேரம் மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். தற்போதைய நிலையில் மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு கட்சியினரும் திருத்தங்கள் பலவற்றை முன்மொழிந்தனர். 

                


Advertisement

இதனையடுத்து, நீண்ட விவாதத்திற்கு பின்னர், முத்தலாக் தடை மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த அனைத்து திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டன. இதனால், காங்கிரஸ், அதிமுக, சமாஜ்வாடி கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். மசோதாவுக்கு ஆதரவாக 245 வாக்குகள் பதிவாகின. எதிர்ப்பு தெரிவித்து 11 வாக்குகள் பதிவானது. இதனால், பெரும்பான்மையுடன் முத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது. மக்களவை நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் நாளை காலை 11 மணி அவை மீண்டும் தொடங்க உள்ளது.

         

மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அடுத்ததாக மாநிலங்களில் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டும். மக்களவையில் ஆளும் பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால் மற்ற கட்சிகளின் உதவி இல்லாமல் மசோதாவை நிறைவேற்றிட முடியும். ஆனால், மாநிலங்களவையில் பாஜகவுக்கு போதிய பெரும்பான்மை கிடையாது. இதனால்தான், கடந்த முறையும் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களையில் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement