தற்கொலை செய்துகொள்வதற்காக கால்வாய் நீரில் குதித்த தாய் மற்றும் குழந்தையை மீட்ட ஆட்டோ டிரைவர், உயிரிழந்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
டெல்லியில் சிறிய ரக ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநராக இருந்தவர் பவன். இவர் தனது ஆட்டோவில் பயணிகளை கொண்டு சேர்த்துவிட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்தார். வரும் வழியில் மீதாபூர் கால்வாயின் பாலத்தின் மீது பெண் ஒருவர் கையில் குழந்தையுடன் நிற்பதைக் கண்டுள்ளார். அப்போது சட்டென அப்பெண் குழந்தையுடன் ஆற்றில் குதித்ததைக்கண்டு பவன் அதிர்ச்சியடைந்துள்ளார். அத்துடன் ‘ஓடிவாருங்கள்.. யாராவது காப்பாற்றுங்கள்’ என்று சத்தமிட்டுக்கொண்டே, சற்றும் யோசிக்காமல் தாய் மற்றும் சேயைக் காப்பாற்ற தண்ணீருக்குள் குதித்துள்ளார்.
அவரது சத்தம் கேட்டு அங்கு மக்கள் கூடிவிட்டனர். அங்கு கூடிய மக்கள் பவனால் மீட்கப்பட்ட தாயையும், குழந்தையையும் தண்ணீரில் இருந்து தூக்கியுள்ளனர். ஆனால் அதற்குள் பவன் தண்ணீருக்குள் சென்றுவிட்டார். பின்னர் அவரை மக்கள் தேட அவர் கிடைக்கவில்லை. மீட்கப்பட்ட தாயும், குழந்தையும் மருத்துவமனைக்கு அனுப்பட்டனர். அதற்குள் காவல்துறையினர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனர். அவர்கள் தொடர்ந்து பவனை தேடியுள்ளனர்.
4 நாட்களாக தேடியும் பவனின் உடல் கிடைக்கவில்லை. தற்போது அந்தப் பெண்ணும், குழந்தையும் நலமுடன் உள்ளனர். அப்பெண்ணிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கணவருடன் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு தற்கொலை செய்துகொள்ள தண்ணீருக்குள் குதித்ததாக தெரிவித்துள்ளார். தனது உயிரைக்கொடுத்து இரண்டு உயிர்களை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர் பவனின் பெயரை உயிர்க் காப்போருக்கு வழங்கப்படும் ‘ஜீவன்ரக்ஷா’ விருதுக்காக பரிந்துரைக்க உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Loading More post
பட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு!
சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி?
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?
பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?