ரூ.70க்கு கீழ் டெல்லியில் பெட்ரோல் விலை - 2018-லேயே இது தான் குறைவு..!

ரூ.70க்கு கீழ் டெல்லியில் பெட்ரோல் விலை - 2018-லேயே இது தான் குறைவு..!
ரூ.70க்கு கீழ் டெல்லியில் பெட்ரோல் விலை - 2018-லேயே இது தான் குறைவு..!

2018ஆம் ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில், பெட்ரோலின் விலை இந்த ஆண்டில் ரூ.70க்கு கீழ் டெல்லியில் விற்கப்படுகிறது.

2018ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்கள் மற்றும் மக்கள் பிரச்னைகளுள் குறிப்பிடத்தக்க ஒன்று பெட்ரோல், டீசல்  விலை உயர்வு எனலாம். ஏனென்றால் இந்த ஆண்டில் தான் இந்தியாவில் பெட்ரோலின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியாக எதிர்க்கட்சிகள் பரப்புரை செய்து வந்தனர். 

இந்நிலையில், இந்த ஆண்டு முடிவடையும் நிலையில் டெல்லியில் ரூ.70க்கு கீழ் பெட்ரோலின் விலை வந்துள்ளது. கிறிஸ்துமஸ் தினமான இன்று டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 69.79 ஆக விற்கப்படுகிறது. இது இந்த ஆண்டு டெல்லியில் விற்கப்படும் பெட்ரோலின் குறைந்த விலையாகும். நேற்றைய தினம் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.69.86 ஆக விற்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து மற்ற முக்கிய நகரங்களான மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் முறையே ரூ.75.41, ரூ.72.41 மற்றும் ரூ.71.89 ஆக பெட்ரோல் விற்கப்படுகிறது. இதற்கு முன்னர் இந்த ஆண்டில் மும்பை மற்றும் கொல்கத்தாவில் விற்கப்பட்ட பெட்ரோலின் குறைந்தபட்ச விலை முறையே, லிட்டருக்கு ரூ.75.48 மற்றும் ரூ.71.96 ஆகும். டீசலை பொறுத்தவரையில் டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் முறையே ரூ.63.88, ரூ.65.59, ரூ.66.79 மற்றும் ரூ.67.38 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை சரிந்ததே பெட்ரோல் விலை குறைவிற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com