விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மாறுபட்ட வடிவமைப்பு மற்றும் நிறத்துடன் புதிய இருபது ரூபாய் நோட்டுகளை விரைவில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளதாக கூறியுள்ளது. 


Advertisement

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ரிசர்வ் வங்கி கடந்த சில வருடங்களாக ரூபாய் நோட்டில் பல மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி புதியதாக 2000, 500, 200, 100, 50, 10 ரூபாய் நோட்டுகளை புதிய வடிவில் வெளியிட்ட ரிசர்வ் வங்கி தப்போது புதிய 20 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியாக இருக்கிறது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் வரும் நிதியாண்டில் புதிய 20 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது என தகவல் தெரிவிக்கின்றன.

Image result for reserve bank of india


Advertisement

மேலும் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி 4.92 பில்லியன் 20 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததுள்ளது. அது மார்ச் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரு மடங்குகளாக அதிகரித்து தற்போது 10 பில்லியன் 20 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது. மொத்த ரூபாய் நோட்டு புழக்கத்தில் 9.8 சதவிகிதம் அளவுக்கு 20 ரூபாய் நோட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

loading...

Advertisement

Advertisement

Advertisement