ஆளும்கட்சி, எதிர்க்கட்சி போன்ற அரசியல் தயாரிப்பாளர் சங்கத்திற்குள் தேவையில்லை என்று இயக்குநர் பார்த்திபன் வலியுறுத்தினர்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பொதுக்குழுவை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும் சங்க பணம் ரூ.7கோடி கையாடல் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி ஏ.எல்.அழகப்பன் தலைமையிலான தயாரிப்பாளர்கள் ஒருசிலர் போர்க்கொடி தூக்கி வந்தனர். மேலும் சங்கத்தில் பதவியில் உள்ள கவுதம் மேனன் மற்றும் பிரகாஷ்ராஜ் சங்கத்திற்கு வருவதே இல்லை எனக் குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக அச்சங்கத்தில் உள்ள ஏ.எல்.அழகப்பன், டி.சிவா, ஜே.கே. ரித்தீஷ், எஸ்.வி. சேகர், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகங்களுக்கு கடந்த டிசம்பர் 20ம் தேதி பூட்டு போட்டனர். இதனையடுத்து, விஷால் தரப்பினர் மறுநாள் தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்ற போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அனுமதியின்றி கூடியதாக கைது செய்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.
இதனையடுத்து, சென்னையில் தயாரிப்பாளர் சங்க அவசர செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவர் கவுதம் மேனனுக்கு பதிலாக இயக்குநர் பார்த்திபன் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவராக இயக்குநர் பார்த்திபன், இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்காக அனைத்து தயாரிப்பாளர்களும் ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக பார்த்திபன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பூட்டு போட்டு வன்முறையில் ஈடுபடுவது அநாகரீகமானது என்பதை நான் மட்டுமல்ல நீதிமன்றமும் வன்மையாக கண்டித்துள்ளது. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி போன்ற அரசியல் நமக்குள் இருந்தால் அதனை களைந்து ஒற்றுமை மேம்பட முயற்சிப்போம்.
தமிழ் சினிமாவின் உச்சமான ஒரு இசைக்கலைஞனுக்கு உரிய மாரியாதையை கௌரவமாக செய்து, அந்நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் தொகையை நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவிடும் வகையில் செய்யும், செய்திட இடையூறின்றி அனைவரும் இணைந்திட வேண்டுகிறேன்.
இந்நிகழ்ச்சி மகிழ்ச்சியாக முடியும் வரை தலைமையின் அனுமதியின்றி தனித்தனியாக பேட்டிகள் கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டுமென ஏகமனதாய் முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
'ஆட்டோ வீடு' வடிவமைத்த தமிழக இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா!
விருப்ப மனு அளித்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முதல் நேர்காணல்
மேற்குவங்கம்: பாஜக நிர்வாகியின் தாய் தாக்கப்பட்ட விவகாரம்; மகனே தாயை தாக்கியது அம்பலம்?
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
60 வயதை கடந்த 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?