காலஞ்சென்ற வாஜ்பாய் நினைவாக அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94ஆவது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படும் நிலையில், அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பேசிய மோடி, வாஜ்பாய் மறைந்தாலும் அவரின் கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், “வாஜ்பாய் மறைந்துவிட்டார் என்பதை நம்புவதற்கு என்னுடைய மனது மறுக்கிறது. அனைத்து தரப்பினராலும் மரியாதையாக நேசிக்கப்பட்டவர். ஒரு பேச்சாளராக அவர் ஈடு இணையற்றவராக இருந்தார். நாடு உருவாக்கிய முக்கியமான பேச்சாளர்களில் அவரும் ஒருவர்” என்றார் மோடி.
இந்த விழாவில் பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, எல்.கே.அத்வானி, மத்திய கலாச்சாரத் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Loading More post
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை