ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். வடகிழக்கு மாநிலங்களின் கனவு திட்டமான போகிபீல் பாலம் 21 ஆண்டு கால கட்டுமானப் பணிகளுக்கு பிறகு திறக்கப்படுகிறது.
கடந்த 1997-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் எச்.டி.தேவகவுடா போகிபீல் பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய நிலையில் 21 ஆண்டுக்கு பிறகு அப்பாலத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். இந்த பாலம் பிரம்மபுத்திரா நதியின் மேலே சுமார் 4.98 கிலோ மீட்டர் தூரத்துக்குச் செல்கிறது. இந்த பாலம் நாட்டின் முதல் நீளமான பாலமும், ஆசியாவின் இரண்டாவது நீளமான பாலமும் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
இப்பாலத்தால் அஸ்ஸாமில் உள்ள டின்சுகுகியாவிற்கும், அருணாச்சலப் பிரதேசத்தின் நாகர்லகுன் நகரத்திற்கும் இடையேயான பயணம் 10 மணி நேரம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 920 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள போகிபீல் பாலம் இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
Loading More post
பிருத்வி ஷா - தவான் அதிரடி! சென்னையை வீழத்தியது டெல்லி கேபிடல்ஸ்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜைக்கா நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - ஆர்.டி.ஐ மூலம் தகவல்
தியேட்டரில் கூடுதலாக ஒரு காட்சி - தமிழகத்தில் புதிய கொரோனா தடுப்பு விதிமுறைகள்
அதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
தமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு