தெலுங்கானாவில் மீண்டும் ஆணவக்கொலை ! பெற்றோரே மகளை எரித்துக் கொன்றார்களா ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தெலங்கானாவில் இளம்பெண் ஒருவரை அவரது பெற்றோரே ஆணவக்கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement

தெலங்கானாவின் மஞ்சேரியலைச் சேர்ந்தவர் அனுராதா. இவர் டிப்ளமோ படிக்கும் பொழுது கம்யூட்டர் ஆப்ரேட்டரான லக்‌ஷமன் என்பவரை காதலித்துள்ளார். அனுராதாவின் காதலுக்கு அவரது வீட்டில் கடுமையான எதிர்ப்பு வந்த நிலையில் அனுராதாவும், லக்‌ஷ்மணனும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.


Advertisement

இந்நிலையில் திருமணமான ஒரு வாரத்தில் அனுராதாவின் பெற்றோர் அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக லக்‌ஷ்மன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் சாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் அனுராதாவை அவரது பெற்றோர்கள் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இந்நிலையில் அனுராதாவின் கிராமத்துக்கு அருகே மனித எலும்புகளை கண்டெடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தெரிவித்த போலீசார், ''புகாரின் அடிப்படையில் காணாமல் போன அனுராதாவை தேடி வருகிறோம். அவரின் கிராமத்துக்கு அருகே சில எலும்புத்துண்டுகளை கண்டெடுத்தோம். அதனை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். அதன் முடிவு வந்த பிறகே எந்த முடிவையும் கூற முடியும்'' என்று தெரிவித்தார்.

அனுராதாவின் பெற்றோர், உறவினர்களை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் நிர்மல் மாவட்டத்துக்கு அருகே அனுரதாவின் உடலை எரித்துவிட்டதாக அவரது உறவினர்கள் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. ஆனாலும் அனுராதா எப்படி இறந்தார் என்பதை உறுதியாக கூறமுடியாது என்றும் ஆய்வு முடிவுகள் வெளிவந்த பிறகே உறுதியான தகவலை தர முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Advertisement

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அனுராதா வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ''நானும் லக்‌ஷ்மன்னும் இணைந்து வாழ விரும்புகிறோம். எங்களுக்கு எதாவது ஆபத்து என்றால் அதற்கு என் பெற்றோரே காரணம்'' என்று தெரிவித்துள்ளார். அந்த வீடியோவின் அடிப்படையிலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement