உருளைக்கிழங்கு உற்பத்தியை அதிகரிக்க மதுபானம்.. அதிர்ச்சி தகவல்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உருளைக்கிழக்கு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் மதுபானம் பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என்று நீண்ட காலமாகவே தெரிவித்து வருகின்றனர். சில நேரங்களில் நீர் இல்லாமல் பயிர் கருகிறது. சில நேரங்களில் வெள்ளத்தால் பயிர்கள் அழிந்துவிடுகிறது. சில சமயமோ எல்லாம் சரியாக இருந்தும் விளைபொருட்களுக்கு ஏற்ற விலை இல்லாமல் போகிறது.. இப்படி விவசாயிகளின் பிரச்னைகள் ஏராளம்.


Advertisement

அதேபோன்று பூச்சிக்கொல்லிகள் பற்றி தெளிவான பார்வை இல்லாத விவசாயிகள் பயன்படுத்தும் சிலவகை பூச்சிக்கொல்லி மருந்துகள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் அமைந்துவிடுதாக விவசாயிகள் மீது குற்றச்சாட்டு நிலவுகிறது. அதேபோன்று இத்தகைய பூச்சிக்கொல்லி மருந்துகளால் மண்ணின் தன்மையும் கெடுவதாக கூறப்படுகிறது.

இதனிடையே உருளைக்கிழங்கு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் மதுபானம் பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் புலந்ஷர் விவசாயிகள்தான் இவ்வாறு செய்துள்ளனர். இதுகுறித்து தாவரவியல் உற்பத்தி அதிகாரி ஒருவர் கூறும்போது, “ மதுபானத்தை தாவரங்களுக்கு மருந்தாக பயன்படுத்தினால் உற்பத்தி அதிகரிக்கும் என்று அறிவியல்பூர்வமான காரணங்கள் இதுவரை இல்லை. ஆனால் உற்பத்தி அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இவ்வாறு செய்திருக்கின்றனர். இது முற்றிலும் தவறானது. அவர்களை சரியான மருந்துகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்” என கூறியுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement