வங்கி ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்தம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வங்கிகள் இணைப்பைக் கண்டித்து, வரும் 26 ஆம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று 9 வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


Advertisement

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி அதிகாரிகள் கடந்த 20-ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் 26 ஆம் தேதி ஒன்பது வங்கிகளின் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.


Advertisement

பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய வங்கிகளை ஒன்றாக இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள் ளது. இந்த இணைப்பைக் கண்டித்து வங்கிகள் 26 ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன.

இதில் 3.2 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிப் பணிகள் மீண்டும் பாதிக்கும் எனத் தெரிகிறது. 


Advertisement

நாளை வங்கிகள் செயல்படும். 25-ம் தேதி கிறிஸ்துமஸ் என்பதால் அரசு விடுமுறை. வங்கிகள் செயல்படாது. 26 ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுவதால் அன்றும் வங்கிகள் செயல்படாது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement