சினிமா டிக்கெட் மீதான ஜி.எஸ்.டி குறைப்பு யானைப் பசிக்கு சோளப்பொறி போன்றது என திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு விமர்சித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் நேற்று காலை டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கவுன்சில் உறுப்பினர்களாக உள்ள மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டு தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவித்தனர். தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 33 பொருட்கள் மீதான வரியை குறைக்க முடிவு எடுக்கப்பட்டது. 100 ரூபாய்க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி 28 %ல் இருந்து 18%ஆக குறைக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி 18%ல் இருந்து 12%ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகம் சம்பந்தப்பட்ட 23 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. இதில் 28% உள்ள பொருட்கள் 12% ஆகவும் சில பொருட்கள் 5% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது”என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதற்கு ஃபெப்சி அமைப்பு அரசுக்கும் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் நன்றி தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சினிமா டிக்கெட் மீதான ஜி.எஸ்.டி குறைப்பு குறித்து திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு விமர்சித்துள்ளார்.
வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் அவர் அளித்த பேட்டியில், “சினிமா டிக்கெட்டுக்கான ஜி.எஸ்.டி குறைப்பு என்பது யானை பசிக்கு சோளப் பொறி மாரிதான் உள்ளது. மொத்தத்தையும் அகற்றினால் தான் சினிமா நல்லா இருக்கும், தலைக்கும். அதோடு மட்டும் இல்லாமல் இன்றைக்கு இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வுக்கும் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சிக்கு ஜி.எஸ்.டி தான் காரணம் இதை அறவே அகற்ற வேண்டும். அக இருள் அகற்றி அறிவொளி வீச வேண்டும்” என தெரிவித்தார்.
Loading More post
நீடிக்கும் தொகுதிப் பங்கீடு இழுபறி... விசிகவுக்கு தனிச் சின்னமா? திமுக சின்னமா?
பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் சிறு கட்சிகளுக்கு ஏற்படும் சாதக பாதகம் என்ன? ஓர் அலசல்
'கோவாக்சின் 81% செயல்திறன் கொண்டது..' ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்
பெட்ரோல், டீசல் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை தாராளாமாக குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?