வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள்


ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப் 11 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது.

ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 4.10 மணிக்கு ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்திய எல்லை பகுதிகளில் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்துவது, விமான பயன்பாட்டிற்கு உதவும் வகையிலான ‘ஜிசாட்- 7ஏ’ தகவல் தொடர்பு செயற்கைக்கோளாக வடிவமைத்துள்ளது இஸ்ரோ. 2,250 கிலோ எடை கொண்ட ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளானது இந்தியாவின் 35வது தகவல் தொடர்பு செயற்கைக்கோளாகும். 

இந்தச் செயற்கைக்கோள் குறைந்தபட்சம் 170 கி.மீ தூரமும், அதிகபட்சம் 40,900 கி.மீ தூரமும் கொண்ட புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கிரையோஜினிக் இன்ஜின் இதில் பயன்படுத்தப்படுகிறது. ஜிசாட்-7ஏ  செயற்கைக்கோளில் 3.3 கிலோ வாட் திறன் கொண்ட பேட்டரியும், கியூ-  பேண்ட் டிரான்ஸ்பாண்டர்களும் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்தச் செயற்கைகோள் முழுவதும் கியூ-பேண்ட் பயனாளர்களின் தொலைதொடர்புக்கு உதவும். மேலும், இது இந்திய விமானப்படைக்கு உதவும் வகையில் ரேடார் நிலையங்கள், விமான தளங்களுடன் இணைப்பை ஏற்படுத்தும். 

ஜி.எஸ்.எல்.வி எப்-11 ராக்கெட்டானது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் 13வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்த ஆண்டில் ஏவப்படும் 7வது ராக்கெட். விண்ணில் ஏவப்படும்  ‘ஜிசாட்-7ஏ’ செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 8 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com