ஸ்ரீதேவி ஆசையை நிறைவேற்றிக் கொடுத்த அஜித்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகை ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே அஜித், அவரது தயாரிப்பில் நடித்து வருவதாக செய்தி கிடைத்துள்ளது.


Advertisement

இயக்குநர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் புதிய படம் ஒன்றில் நடிக்க தொடங்கியுள்ளார். இதன் பூஜை சமீபத்தில்தான் போடப்பட்டது. அந்த விழாவில் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் கலந்துக் கொண்டார். இவர்தான் இந்தப் படத்தினை தயாரித்து வருகிறார். வேறு சில தயாரிப்பாளர்களின் படத்தில் அஜித் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க தொடங்கியது பெரிய ஆச்சர்யமாக இருந்தது. 


Advertisement

ஏன் இவரது தயாரிப்பில் நடிக்க சம்மதித்தார்? அதுவும் ஒரு ரீமேக் கதையில் ஏன் நடிக்க ஒப்புக்கொண்டார் எனப் பல சந்தேகங்கள் முன் வைக்கப்பட்டன. இந்நிலையில் ‘ஏகே59’ படம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளன. 2012 ஆண்டு வெளியான ஸ்ரீதேவியின் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் அஜித் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். அப்போது அஜித்துடன் நடிகை ஸ்ரீதேவிக்கு பழக்கம் ஏற்பட்டது. 

அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஸ்ரீதேவி தனது தயாரிப்பில் நடிக்க கேட்டுள்ளார். ஆகவே அவரது ஆசையை நிறைவேற்ற நடிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் அஜித்தே ‘பிங்க்’ படத்தை தமிழில் ரீமேக் செய்யலாம் என யோசனையும் கூறியுள்ளார். அந்தப் படம் ஸ்ரீதேவியின் ஃபேவரைட் படம் என்று அவர் அறிந்துக் கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் நடக்கும் மரபார்ந்த விஷயங்களை உடைக்கும் விதமாக இந்த ரீமேக் முயற்சி இருக்கும் என்றும் அஜித் பேசியதாக தெரிகிறது.

இந்தப் படத் தயாரிப்பு குறித்து ஸ்ரீதேவின் கணவர் போனி கபூர் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “என் மனைவியுன் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் இணைந்து நடித்தார் அஜித். அப்போதுதான் எங்கள் கம்பெனிக்கு ஒரு படம் பண்ண சொல்லி அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். நாங்கள் எதிர்பாக்காத ஒருநாளில் அஜித் எங்க வீட்டிற்கு வந்தார். அது நடந்து ஒரு வருடம் இருக்கும். நாங்கள் உட்கார்ந்து பேசும் போது அவரே, ‘பிங்க்’ படத்தை தமிழில் ரீமேக் செய்யலாம் என்றார். உடனே என் மனைவி ஒப்புக்கொண்டார். அஜித் இந்தப் படத்தில் மிக சிறப்பாக வெளிப்பட இருக்கிறார். இது சிறப்பான தமிழ்ப் படமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.


Advertisement

மேலும், “தென் இந்தியாவில் நாங்கள் படம் தயாரிக்க தொடங்கியுள்ளதை நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். அதுவும் தமிழ் சினிமா என்பது எனக்கு மிக முக்கியமானதாகும். நானும் அஜித்தும் இதன் மூலம் இணைந்து பெரிய பயணத்தை தொடங்கி இருக்கிறோம். அவர் என் மனைவியுடன் ஏற்கெனவே திரை வாழ்க்கையை பகிர்ந்து கொண்டவர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

நடிகை ஸ்ரீதேவி தமிழ்நாட்டு பெண் என்பதை தனியாக சொல்லத்தேவையில்லை. அவர் தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட் போய் மிகப் பெரும் பிரபலமாக மாறினார். இன்று அவரது கம்பெனி அஜித் மூலம் தமிழில் கால் பதித்துள்ளது. 

இந்தப் படத்தை இயக்கும் ஹெச்.வினோத் ஏற்கெனவே இரு வெற்றி படங்களை கொடுத்தவர். அவரின் ‘சதுரங்கவேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இரண்டும் தமிழில் தவிர்க்க முடியாத படங்கள். அஜித்தின் புதிய படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement