ஆஸி.டெஸ்ட்: பிருத்வி ஷா விலகல், பாண்ட்யா, மயங்க் அகர்வால் சேர்ப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள 2 டெஸ்ட் தொடரில் இருந்தும் பிருத்வி ஷா விலகியுள்ளார். மயங்க் அகர்வால், ஹர்திக் பாண்ட்யா சேர்க்கப்பட்டுள்ளனர். 


Advertisement

ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இப்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் இளம் வீரர் பிருத்வி ஷா ஆடுவதாக இருந்தது. பயிற்சி ஆட்டத்தில் அவர் கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் முதல் இரண்டு போட்டியில் இருந்து விலகினார். காயம் இன்னும் குணமடையாததால் அடுத்த இரண்டு போட்டிகளில் இருந்தும் அவர் விலகியுள்ளார். 


Advertisement

(பிருத்வி ஷா)


இதையடுத்து மயங்க் அகர்வாலும், ஆசிய கோப்பையில் காயமடைந்து போட்டிகளில் இருந்து விலகிய ஹர்திக் பாண்டியாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற ரஞ்சி போட்டியில் 73 ரன்கள் எடுத்ததுடன், 7 விக்கெட்டும் வீழ்த்தியிருந்தார் பாண்ட்யா. இருவரும் 3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலியா சென்று அணியினருடன் இணைய உள்ளனர்.


Advertisement

(மயங்க் அகர்வால்)

3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் 26 ஆம் தேதியும், 4-வது போட்டி சிட்னியில் ஜனவரி 3 ஆம் தேதியும் தொடங்கு கிறது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement