“சூரியன் மறைவதில்லை” புத்தகத்தை வெளியிட்டார் சோனியா காந்தி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கருணாநிதி சிலைத் திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் “சூரியன் மறைவதில்லை” புத்தகத்தை சோனியாகாந்தி வெளியிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.


Advertisement

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலை, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.


Advertisement

இதன்பின் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் சென்ற சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி, கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ராயப்பேட்டையில் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

பொதுக்கூட்டத்தில்  “சூரியன் மறைவதில்லை” புத்தகத்தை சோனியாகாந்தி வெளியிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தலைவர்கள் பேசி வருகின்றனர். தேசிய தலைவர்கள் வருகையையொட்டி, காவல்துறை சார்பில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement