வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 24 மணிநேரத்திற்குள் புயலாக மாற வாய்ப்புள்ளதாகச் சென்னை
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயலுக்குப் பின் தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. வட மாவட்டங்களை பொறுத்தவரை வறண்ட
வானிலையே காணப்பட்டது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 930 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலம்
மசூலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே ஆயிரத்து 90 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது 24 மணி
நேரத்திற்குள் புயலாக மாறி வரும் டிசம்பர் 17ஆம் தேதி ஓங்கோலுக்கும், காக்கிநாடாவுக்கும் இடையே கரையைக் கடக்கக்
கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாளை முதல் 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழையும் ஓரிரு இடங்களில்
கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் 15,16ஆம் தேதிகளில் வங்கக் கடல்
பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Loading More post
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
போலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்
டிராக்டர் பேரணி: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... டெல்லியில் பதற்றம்!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி