நடிகை ஸ்வேதா பாசு திருமணம்: இயக்குனரை மணந்தார்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகை ஸ்வேதா பாசு, இயக்குனர் ரோகித் மிட்டல் திருமணம் புனேவில் நேற்று நடந்தது.


Advertisement

தமிழில், உதயா நடித்த ரா ரா, ஒரு முத்தம் ஒரு யுத்தம், கருணாஸ் நடித்த சந்தமாமா உட்பட சில படங்களில் நடித்தவர் ஸ்வேதா பாசு. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தேசிய விருதும் பெற்றுள்ளார்.


Advertisement

இவரும் இவரது நீண்ட நாள் நண்பரான இந்திப் பட இயக்குனர் ரோகித் மிட்டலும் காதலித்து வந்தனர். இரு வீட்டார் சம்மதத்தை அடுத்து திருமண நிச்சயதார்த்தம் கடந்த வருடம் மும்பையில் நடந்தது. திருமண தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் திருமணம் டிசம்பர் 13 ஆம் தேதி புனேவில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டமாக இவர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் இந்தோனேஷியாவின் பாலி தீவு சென்றனர். இது தொடர்பான புகைப்படங்களை ஸ்வேதா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.


Advertisement

இந்நிலையில் இவர்கள் திருமணம் புனேவில் பெங்காலி மற்றும் மார்வாரி முறைப்படி நேற்று நடந்தது. இதில், நெருங்கிய உறவினர்கள் மற் றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். இவர்கள் திருமணம் செய்துகொள்ள இயக்குனர் அனுராக் காஷ்யப்தான் முக்கிய காரணம் என்று கூறப்படு கிறது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement