உள்ளூர் போட்டிகளில் தோனி விளையாட வேண்டும்: அமர்நாத்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தோனி உட்பட மூத்த கிரிக்கெட் வீரர்கள், உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் மொகிந்தர் அமர்நாத் தெரிவித்துள்ளார்.


Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். குறுகிய ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை. ஒரு நாள் தொடரில் மட்டுமே அவர் விளையாட இருக்கிறார்.


Advertisement

இந்நிலையில் ஓய்வில் இருக்கும் அவர், உள்ளூர் தொடர்களான விஜய் ஹசாரே தொடர் மற்றும் ரஞ்சி போட்டிகளில் விளையாடுவார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் பங்கேற்கவில்லை. அவரது ஃபார்மும் கேள்விக்குள்ளாகி இருக்கிறது. 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் மொகிந்தர் அமர்நாத், ‘’தோனி உட்பட மூத்த வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

டெல்லியில் நடந்த விழா ஒன்றில் பேசிய அவர், ’’இந்தியாவுக்கு விளையாட விரும்பும் ஒவ்வொரு வீரரும், தங்கள் மாநில அணிக்காக விளையாடுவது அவசியம். நாட்டுக்கான அணியில் இடம் பெறாத நிலையில் உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் பங்கேற்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்ய வேண்டும்.

தோனி உட்பட பல மூத்த வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதில்லை. ஒரு பார்மெட் போட்டியில் மட்டும் விளையாடுகிறீர்கள் என்றால், தேர்வுக்குழு பரிசீலனைக்காக, அனைத்துவிதமான உள்ளூர் போட்டிகளிலும் விளையாட வேண்டும்’’ என்றார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement