ஐபிஎல் ஏலம் : அடிமாட்டு விலையில் யுவராஜ் சிங்

4-Indian-players-include-Yuvaraj-singh-with-INR-1-Cr-base-price-for-IPL-auction

12வது ஐபிஎல் போட்டியின் ஏலத்திற்கான வீரர்கள் விலை நிர்ணயப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


Advertisement

கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் ஒரு தொடராக இருப்பது ஐபிஎல் டி20 கிரிக்கெட். உலக வீரர்கள் முதல் உள்ளூர் வீரர்கள் வரை கலக்கும் களமாக அது உள்ளது. 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 12வது ஐபிஎல் தொடரின் ஏலம் 18ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக 14 நாடுகளைச் சேர்ந்த 1003 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் பதிவு செய்த வீரர்களில் 346 பேரை ஏலப் பட்டியலுக்கு ஐபிஎல் நிர்வாகக் குழு தேர்வு செய்துள்ளது. 


Advertisement

இதில் வீரர்களின் தற்போதைய ஸ்டிரைக் ரேட்டை பொறுத்து, அவர்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயம் செய்யப்பட்ட வீரர்களின் விலையில் ஐபிஎல் குழு ஏலத்தின் போது கூறும். அந்த வீரர்களை அணியின் நிர்வாகக் குழு ஏலத்தில் விலை கொடுத்து எடுப்பார்கள். இதில் சிறந்த வீரர்களுக்கு கெடுபிடி அதிகமாக இருக்கும் என்பதால், அவர்களை எடுக்க அணிகள் விலையால் போட்டி போடும். 

தற்போது வெளியிடப்பட்டுள்ள விலை நிர்ணயப் பட்டியலில், ஃபார்மில் உள்ள சர்வதேச வீரர்களுக்கு 5 கோடிக்கும் மேல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் ஒருகாலத்தில் உலகத்தின் சிறந்த வீரர்களாக இருந்த சில முக்கிய நபர்கள் தற்போது அடிமாட்டு விலைக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனர். 


Advertisement

தேர்வு செய்யப்பட்டுள்ள 346 வீரர்களில் 226 இந்தியர்களும், 26 தென் ஆப்பிரிக்க வீரர்களும், 23 ஆஸ்திரேலியர்களும், 18 மேற்கிந்திய தீவினரும், 18 இங்கிலாந்தினரும், 13 நியூஸிலாந்தினரும், 7 இலங்கையினரும், 2 வங்கதேசத்தினரும், 2 ஜிம்பாப்வேயினரும், 1 அமெரிக்கரும், அயர்லாந்தைச் சேர்ந்த ஒருவரும் மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த ஒருவரும் உள்ளனர். 

இதில் பிரபல வீரர்களான ப்ராண்டன் மெக்கல்லம், க்ரிஷ் வோக்ஸ், லஷித் மலிங்கா, ஷான் மார்ஸ், கோரே அண்டர்சன், சாம் குரான், அஞ்சிலோ மேத்தீவ்ஸ் மற்றும் ஆர்சி ஷார்ட் ஆகியோர் வெறும் ரூ.2 கோடிக்கு மதிப்பிடப்பட்டுள்ளனர். அதற்கும் கீழாக இந்திய வீரர் ஜெயதேவ் உனாட்கட் ரூ.1.5 கோடிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதையும் தாண்டி அடிமாட்டு விலையாக ரூ.1 கோடிக்கு யுவராஜ் சிங், சாஹா, முகமது ஷமி மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனர். இன்று யுவராஜ் சிங் பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement