ஸ்ரீதேவி மகளுடன் ஜோடி போடும் துல்கர் சல்மான்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தனது மூன்றாவது இந்தி படத்தில் ஸ்ரீதேவி மகளான ஜான்வியுடன் நடிகர் துல்கர் சல்மான் ஜோடி சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். அடுத்தடுத்த ஹிட் படங்கள் மூலம் தவிர்க்க முடியாத நடிகராக உள்ளார். மலையாளத்தில் அவர் நடித்த‘சார்லி’,‘பெங்களூர் டேஸ்’,‘கம்மாட்டிபாடம்’,‘பறவா’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் வசூலை குவித்தன. மலையாளம் அல்லாது கோலிவுட், பாலிவுட்டிலும் படங்கள் நடித்து வருகிறார். ஹிந்தியில் இவர் அறிமுகமான ‘கர்வாண்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது துல்கர் சல்மான், சோனம் கபூருடன் தனது இரண்டாவது படத்தை நடித்து வருகிறார்.


Advertisement

இந்நிலையில் தனது மூன்றாவது இந்தி படத்தில் ஸ்ரீதேவி மகளான ஜான்வியுடன் ஜோடி சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவின் முதல் பெண் ராணுவ ஹெலிகாப்டர் பைலட்டாக பணியாற்றிய குஞ்சன் சக்சேனாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கரண் ஜோகர் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தத் திரைப்படத்தில் ஹெலிகாப்டர் பைலட்டாக நடிக்கவிருக்கும் ஜான்வி, அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 


Advertisement

இந்நிலையில் இந்தப்படத்தில் ஜான்வியின் காதலனாக துல்கர் சல்மான நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தத் திரைப்படத்தின் கதை முழுக்க முழுக்க ஜான்வியை சுற்றியே நகரும் என்றாலும், துல்கருக்கு நல்ல கதாபாத்திரம் இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

loading...

Advertisement

Advertisement

Advertisement