‘இந்தியன்2’ திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கிய படம் ‘இந்தியன்’, 1996 ஆம் ஆண்டு வெளியானது. ஊழலை ஒழிப்பது குறித்து இப்படத்தின் கதை அமைந்திருந்தது. கமல் இருவேடங்களில் நடித்த இந்தப் படம் மூன்று தேசிய விருதுகளை பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதை கமல் பெற்றார்.
இந்நிலையில் தனியார் நிகழ்ச்சியின் போது நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மற்றும் தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகியோர் ‘இந்தியன் 2’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால் ‘விஸ்வரூபம்’ படத்தில் கமலும் ‘2.0’ படத்தில் ஷங்கரும் பிஸியாக இருந்ததால் ‘இந்தியன்2’ படத்தின் பணிகள் காலதாமதமாகியது. இதையடுத்து இப்படத்தின் தயாரிப்பாளராக இருந்த தில் ராஜூ இப்படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பு வெளியிட்டார்.
பின்னர், ‘2.0’ தயாரிப்பு நிறுவனமான ‘லைக்கா புரொடக்சன்ஸ்’ ‘இந்தியன்2’ படத்தை தயாரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், தற்போது, ‘இந்தியன்2’ திரைப்படத்திற்கான செட் அமைக்கும் வேலைகள் கடந்த மாதமே தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு டிசம்பர் 15க்கு மேல் தொடங்க உள்ளதாகவும் ஆனால் திரைப்படம் 2020 ஆம் ஆண்டில்தான் வெளியிடப்படும் எனவும் லைக்கா நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில்‘இந்தியன்2’ திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அனிருத் பேசிய போது இது குறித்து அறிவிப்பை வெளியிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி ரஜினிகாந்தின் ‘பேட்ட’ திரைப்படத்துக்கு பிறகு அனிருத் ‘இந்தியன்2’க்கு இசையமைப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
‘இந்தியன்2’மூலம் அனிருத் முதன்முதலாக ஷங்கருடனும், கமல்ஹாசனுடன் இணைகிறார். சமீபத்தில் அனிருத் இசையமைத்து வெளியாகியுள்ள ‘பேட்ட’ திரைப்படத்தின் பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
அம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை