பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி முன்னிலை நிலவரம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

5 மாநில சட்டசபை தேர்தலில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் மூன்று தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றுள்ளது. 


Advertisement

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை
மொத்தமாக நடைபெற்று வருகிறது. இதில், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. இருப்பினும், காங்கிரஸ், பாஜக இடையே பெரிய வித்தியாசம்
இல்லை. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ், பாஜக இடையே சம அளவு போட்டி நிலவி வருகிறது. தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆட்சியை தக்க வைத்துள்ளது.
மிசோரத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. 

இரண்டு மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் நிலை உருவாகியுள்ளதை காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். தங்களது கட்சி அலுவலகங்கள் முன்பாக பட்டாசு வெடித்து
மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இன்னும் ஒருசில மணி நேரங்களில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்பது உறுதியாகிவிடும். 


Advertisement

         

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் இரண்டு தொகுதிகளிலும், சத்தீஸ்கரில் ஒரு இடத்திலும் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது. அதேபோல், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மத்திய
பிரதேசம் 5, ராஜஸ்தான் 4 முன்னிலை வகிக்கிறது. சத்தீஸ்கரில் மாயாவதி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கிட்டத்தட்ட
17 இடங்கள் வரை பகுஜன் சமாஜ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ராஜஸ்தானில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது. 

ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள்  பாஜகவுக்கு எதிர் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள். இந்தக் கட்சிகளின் வெற்றிகள் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர்
காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக மாற வாய்ப்புள்ளது. 


Advertisement

ராஜஸ்தானில் ராஷ்டிரிய லோக் அண்ட்ரிக் கட்சி 12 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இது தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement