5 ஆயிரம் கி.மீ சென்று தாக்கும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சென்று இலக்கை தாக்கும் அக்னி 5 ஏவுகணையின் 7 வது சோதனை வெற்றியடைந்துள்ளது.


Advertisement

அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட அக்னி-5 ஏவுகணை ஒடிசாவில் உள்ள டாக்டர் அப்துல்கலாம் தீவில் இருந்து இன்று மதியம் 1.30 மணிக்கு ஏவப்பட்டது.

ஏற்கெனவே 350 கி.மீ பாயும் பிரிதிவி-2 , 700 கி.மீ செல்லும் அக்னி -1, 2000 கி.மீ பாயும் அக்னி -2, 3000 ஆயிரம் கி.மீ செல்லும் அக்னி -3, 4 ஆயிரம் கி.மீ சென்று தாக்கும் அக்னி- 4 ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. 


Advertisement

சீன நாடு முழுவதையும் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில்தான் அக்னி-5 பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது. அக்னி-5 ன் முதல் சோதனை 2012-ம் ஆண்டு தொடங்கியது. அக்னி 5 ஏவுகணை ஐந்தாயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து இலக்குகளைத் தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றது. 

அக்னி 5 மூன்று நிலைகளில் ஏவுகணையை கொண்டுள்ளது. 1.5 டன் அணு ஆயுதங்களை கொண்டு செல்லும் திறன் கொண்டது. 17 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அகலமும் கொண்டது. மற்ற ஏவுகணைகளைக் காட்டிலும் அக்னி 5 ஏவுகணை வழித்தடங்களை கண்டறிவது, போராயுதங்களை தாங்கிச் செல்வது, மற்றும் இயந்திர தரம் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்ட விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மொபைல் லாஞ்சர் பேட் 4 பயன்படுத்தி இந்த ஏவுகணை ஏவப்பட்டது.


Advertisement

கடந்த ஜனவரி மாதம் 18-ம் தேதியன்று அக்னி-5 ஏவுகணையின் 5-வது சோதனை வெற்றிகரமாக முடிந்ததைதொடர்ந்து 6 வது சோதனை கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெற்றிகரமாக முடிந்தது.

இந்நிலையில் அந்த வரிசையில் அகினி 5ன் 7 வது சோதனை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள 7 சோதனைகளிலும் அக்னி 5 ஏவுகணை வெற்றி பெற்றுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement