மஹாராஷ்டிராவில் உள்ள நாசிக் மாவட்டத்தில் வெங்காய விலை குறைந்ததால் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்தியாவிலேயே மஹாராஷ்டிராவில்தான் அதிக அளவில் வெங்காயம் பயிரிடப்படுகிறது. குறிப்பாக மஹாரஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக்கில்தான் மொத்த வெங்காய உற்பத்தியில் 50 சதவீதம் உற்பத்தியாகிறது, இந்நிலையில் சமீப நாட்களாக வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலை வெறும் ரூ.1க்கு மட்டுமே விற்பனையாகிறது. இது வெங்காய விவசாயிகளிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல மாதங்களாக நிறைய செலவு செய்து உழைத்து விளைச்சல் ஏற்படுத்தி வெறும் ஒரு ரூபாய்க்கு வெங்காயம் விற்கப்பட்டால் எப்படி லாபம் பார்க்க முடியும் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நாசிக் மாவட்டத்தில் வெங்காய விலை குறைந்ததாக இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். வடக்கு மஹாராஷ்டிராவைச் சேர்ந்த தத்யபா ஹைனார் மற்றும் மனோஜ் ஹொண்டேஜ் ஆகியோர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.
விவசாயிகளின் தற்கொலை குறித்து கூறிய காவலர்கள், விவசாயி தத்யபா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெங்காய விலை வீழ்ச்சியே அவரின் தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தனர். தத்யபா அறுவடை செய்த 500 குவிண்டாலுக்கும் அதிகமான வெங்காயம் தேக்கத்தில் இருந்ததாகவும், ரூ.11 லட்சத்துக்கும் மேல் வங்கியில் கடன் இருந்ததும்தான் தற்கொலைக்கு காரணம் என்று தத்யபாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்
இதேபோல் விவசாயி மனோஜும் வெங்காய விலை வீழ்ச்சி காரணமாகவே தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என்று காவலர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வெங்காய விலையை உயர்த்தி, தங்களின் வாழ்வாதாரத்தை காக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மஹாராஷ்டிரா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Loading More post
மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து - 12 பேர் உயிரிழப்பு
கொரோனா அதிகமாக உள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 5 மடங்காக உயர்ந்த ஆக்சிஜன் தேவை
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை