‘கட்டி முடிக்கப்பட்ட வீடுக்கு ஜிஎஸ்டி இல்லை’ - மத்திய நிதியமைச்சகம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்றதற்கான சான்று பெறப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது
என்று மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 


Advertisement

வீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி தொடர்பான தகவல்களை மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் கட்டுமானப்
பணிகள் நிறைவுபெற்றதற்கான சான்று பெறப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது என
கூறப்பட்டுள்ளது. இருப்பினும் கட்டுமானப் பணி தொடங்கும்போதோ, கட்டுமானம் முடிந்து நிறைவுச் சான்று பெறப்படாமலோ
உள்ள வீடுகளை வாங்கினால் ஜிஎஸ்டி பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

அதேசமயம் ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு வீடு திட்டம், ராஜிவ் ஆவாஸ் யோஜனா, பிரதமரின் வீடு கட்டும்
திட்டம் ஆகியவற்றின் கீழ் கட்டப்படும் குறைந்தவிலை வீடுகளுக்கான 8 சதவிகித ஜிஎஸ்டியை, கட்டுமான நிறுவனங்கள்
தங்களது வரி வரவில் இருந்து கழித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு பெறும் பலனை வாடிக்கையாளருக்கு வழங்குவதன் மூலம் அவர்களது சுமையைக் குறைக்கவும் நிதி அமைச்சம்
கட்டுமான நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement