வரிசையில் நின்று வாக்களிக்கும் பிரபலங்கள் !

Telugu-Actor-and-Actress-Casted-their-Vote-in-Assembly-Election

தெலங்கானாவில் இன்று நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் சினிமா நடிகர், நடிகைகள் மக்களுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 


Advertisement

சத்தீஸ்கர், மிசோரம், மத்தியபிரதேசத்தில் பல்வேறு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் இன்று தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் ஒரே கட்டமாக நடைப்பெறுகிறது. 119 உறுப்பினர்களை கொண்ட தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.


Advertisement

காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். தெலங்கானா மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவின் போது அசம்பாவிதங்களை தடுக்க காவலர்கள் மற்றும் மத்திய துணை ராணுவப்படையினர், பிற மாநிலங்களைச் சேர்ந்த காவலர்கள் என பல்லாயிரகனக்கானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் பகுதிகளில் மட்டும் 9,100 காவலர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


Advertisement

இந்நிலையில் தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா,அல்லு அர்ஜுன் போன்ற பல பிரபலங்கள் காலையிலேயே மக்களுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

மேலும் நடிகர் நாகார்ஜுனாவின் மனைவி நடிகை அமலா, சிரஞ்சீவியின் மனைவி சுரேகா உள்ளிட்டோர் வரிசையில் நின்று வாக்களித்தனர். மேலும் தெலங்கானாசட்டப்பேரவை தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் VVPAT என கூடிய ஒப்புகை சீட்டு இயந்திரம் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement