ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற புகாரில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இருசக்கர வாகனத்திலும் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டையில் இருசக்கர வாகனம் மூலம் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக தெரிகிறது. இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக டிராபிக் ராமசாமி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் புகார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற புகாரில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் டிசம்பர் 17-ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதவிரவும், மதுரையில் சர்கார் படத்துக்கு எதிரான போராட்டத்தில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதாக புகாரில் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவுக்கும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Loading More post
நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்