நடிகர் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘பேட்ட’. இந்தப் படம் பொங்கல் அன்று திரைக்கு
வரவுள்ளது. இதில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். சசிக்குமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, நவாஜுதீன்
சித்திக் என நட்சத்திரங்கள் பட்டாளமே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இதன் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங், ஆக்ரா
மற்றும் சென்னையில் நடைபெற்றது.
ஏற்கனவே ’பேட்ட’ ரஜினியின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து இன்னொரு புகைப்படமும்
வெளியிடப்பட்டது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் ’மரண மாஸ்’
என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப்பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியன் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ளனர்.
பாடலின் இடையே குரல் கொடுக்கும் ரஜினி, “பாக்கத்தான போற இந்தக் காளியோட ஆட்டத்த” என்று கூறுகிறார். அத்துடன்
பாடல் வரியின் இடையே ‘கால இழுத்து உயர நினைச்சா கெட்டப்பய சார் இடியாய் இடிப்பேன்” என்றுள்ளது.
‘முல்லும் மலரும்’ படத்தில் காளி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி, படம் முழுவதும் “கெட்டப்பய சார் இந்தக் காளி”
என்று கூறியிருப்பார். மீண்டும் தற்போது அதுபோன்ற மாஸூக்கு ரஜினி திரும்பியுள்ளார் என்பதை இந்தப் பாடல்
வெளிப்படுத்துகிறது.
Loading More post
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!