கிணற்றில் கார் கவிழ்ந்து நடிகர் உட்பட 3 பேர் படுகாயம் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரமாக உள்ள கிணற்றில் கார் கவிழ்ந்து துணை நடிகர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.


Advertisement

சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவர் துணை நடிகராக உள்ளார். இவர் தனது மனைவி மாயா, குழந்தை கீர்த்தி ஆகியோருடன் சென்னையில் இருந்து பெங்களுர் நோக்கி குடும்பத்துடன் அவருடைய காரில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே  கார் சென்று கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சென்னை-பெங்களுர் தேசிய நெடுஞ்சாலை உள்ள மின்னூர் என்ற இடத்தில் சாலையோர மரத்தில் மோதியது.


Advertisement

அப்போது மரத்தின் அருகே உள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் கார் கவிழ்த்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த மூன்று பேரும் பலத்த காயம் அடைந்தனர். கார் கவிழ்ந்த இடத்தில் பணி மூட்டம் நிறைந்து ஆள்நடமாட்டம் இல்லாததால் காப்பாற்ற யாரும் வரவில்லை. பின் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த துணை நடிகர் சுந்தர் 108 ஆம்புலன்சிற்கு தன் தொலைபேசியி மூலமாக தகவல் கொடுத்துள்ளார். பின் சம்பவ இடத்திற்கு வந்த 108 உழியர்களால் கிணறு இருக்கும் இடம் தெரியாமல் சுமார் 1 மணி நேரம் சுற்றியும் கண்டறிய முடியாமல் போனது.

பின்னர் காவல் ஆய்வாளர் கோகுல் ராஜ் மொபைல் லொக்கேஷன் மூலம் உடனடியாக கண்டறிந்தனர். இதனையடுத்து கிணற்றில் உள்ள புதருத்கு அடியில் சிக்கிய மூன்று பேரையும் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கிணற்றில் விழுந்த காரை மீட்க முடியவில்லை. இச்சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் துணை நடிகர் சுந்தர் 2 .0 படத்திற்கு கம்ப்யூட்டர் கிராப்பிக்ஸில் பணி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement