ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இளம் வீரர் பிருத்வி ஷா, புஜாரா, விராத் கோலி ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. டிசம்பர் 6ஆம் தேதி முதல் போட்டி தொடங்குகிறது. இதை அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொட ரில் இந்திய அணி பங்கேற்க இருக்கிறது.
இதற்கிடையே, இந்திய அணி ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான இந்த 4 நாள் பயிற்சி ஆட்டம் சிட்னியில் நேற்று தொடங்க இருந்தது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய லெவன் அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங்கில் இறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக இளம் வீரர் பிருத்வி ஷாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். வழக்கமாக தமிழக வீரர், முரளி விஜய் தொடக்க வீரராக களமிறங்குவார். அவர் தொடர்ந்து சொதப்பி வருவதால் ஏழாவது வீரராக களமிறக்க முடிவு செய்யப்பட்டு உட்கார வைக்கப்பட்டார்.
தொடக்க வீரராக களமிறங்கிய பிருத்வி ஷா அதிரடியாக ஆடினார். ஆனால், டி20 தொடரில் சொதப்பிய கே.எல்.ராகுல் இந்த ஆட்டத்திலும் வெறும் 3 ரன்னில் வெளியேறி, ஏமாற்றினார். இதையடுத்து புஜாரா இறங்கினார். பிருத்வி ஷாவும் புஜாராவும் அடித்து ஆடினார். சிறப்பாக ஆடி கொண்டிருந்த பிருத்வி 11 பவுண்டரிகளுடன் 69 பந்துகளில் 66 ரன் எடுத்த நிலையில் பாலின்ஸ் வீசிய பந்தில் போல்டானார்.
இதையடுத்து கேப்டன் விராத் கோலி களமிறங்கினார். மதிய உணவு இடைவேளை வரை, 2 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 169 ரன் எடுத்தி ருந்தது. பின்னர் ஆட்டம் தொடங்கியதும் 54 ரன்கள் எடுத்திருந்த புஜாரா, ராபின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் துணை கேப்ட ன் ரஹானே வந்தார். அவரும் விராத் கோலியும் ஆடி வந்தனர். அபாரமாக ஆடிய விராத் கோலி அரை சதம் அடித்தார். தொடர்ந்து அடித்து ஆடிய அவர் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரஹானே 11 ரன்களுடனும் விஹாரியும் ஆடி வருகின்றனர். 8.20 மணி நிலவரப்படி இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
Loading More post
நீடிக்கும் தொகுதிப் பங்கீடு இழுபறி... விசிகவுக்கு தனிச் சின்னமா? திமுக சின்னமா?
பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் சிறு கட்சிகளுக்கு ஏற்படும் சாதக பாதகம் என்ன? ஓர் அலசல்
'கோவாக்சின் 81% செயல்திறன் கொண்டது..' ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்
பெட்ரோல், டீசல் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை தாராளாமாக குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?