வெளியானது ரஜினியின் '2.O' திரைப்படம்... ரசிகர்கள் கொண்டாட்டம்...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.O’ படத்தின் சிறப்பு காட்சி சென்னையில் இன்று அதிகாலை திரையிடப்பட்டது.


Advertisement

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் ‘2.O’.  550 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ள படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி என 16 மொழிகளில் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் சிறப்புக் காட்சி அதிகாலையிலேயே சென்னையில் திரையிடப்பட்டது.


Advertisement

சென்னையில் உள்ள காசி டாக்கீஸ், ரோகினி தியேட்டர் உள்ளிட்ட திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளாக அதிகாலையில் திரைப்படம் வெளியானது. இதற்காக விடிந்தும் விடியாமலும் அதிகாலை முதலே சென்னையில் திரைப்படம் வெளியாகும் தியேட்டர்‌கள் முன்பு ரசிகர்கள் குவிந்தனர். மேளதாளத்துடன் நடனமாடி பட்டாசு வெடித்து ரசிகர்கள் கொண்டாடினர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள 2.O திரைப்படத்தில் அக்ஷய் குமார், எமி சாக்ஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement