தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீடு உள்ளிட்ட 50 இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 89 கோடி ரூபாய் அளவு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தொடர்ச்சியாக புகார் வந்தது. இந்நிலையில் அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனின் ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். சென்னை கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜய பாஸ்கரின் வீடு, அவரது கல்குவாரி உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.
அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் நைனார் முகமது வீட்டிலிருந்து 3 கோடியே 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்றொரு உதவியாளர் கல்பேஷின் கீழ்பாக்கம் வீட்டில் இருந்து 1 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதி, எம்எல்ஏக்கள் விடுதியிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுதவிர முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோரது வீடுகளில் சோதனை நடந்தது. வருமான வரித்துறை நடத்திய இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. மேலும் 89 கோடி ரூபாய் அளவு முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் உட்பட ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 86 சதவிகித வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெற இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, துணை ராணுவத்தின் உதவியுடன் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டினார்
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!