‌“முரட்டு உருவம்.. மழலை உள்ளம்”... அம்பரீஷ் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

Ambreesh-Passes-away--Kamal-Hassan-condolence

முரட்டம் உருவம் இருந்தாலும், மழலை உள்ளம் கொண்டவர் என நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரீஷ் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Advertisement

கடந்த சில ஆண்டுகளாக உடல் நலப்பி‌ரச்னையால் அவதிப்பட்டு வந்த, அம்பரீஷ் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.


Advertisement

66 வயதான அம்பரீஷ் 200-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளதோடு, அரசியலிலும் பயணித்துள்ளார். மத்திய மற்றும் மாநில அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான அம்பரீஷின் மறைவுக்கு கர்நா‌டக முதலமைச்சர் குமாரசாமி, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சிறந்த மனிதரையும், நல்ல நண்பரையும் இழந்துவிட்டதாக நடிகர் ரஜினிகாந்தும், இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதேபோல நடிகர் கமல்ஹாசனும் அம்பரீஷ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், “ 42 வருடங்களாக என் நண்பர் திரு.அம்பரீஷ். முரட்டு உருவம், மழலை உள்ளம். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும், என்னைப் போன்ற நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.” என தெரிவித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement