திருக்குறளை வைத்து ஏமாற்றிய தருண் விஜய் முகமூடி கிழிந்தது...... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

If-we-were-racists--we-wouldn-t-be-living-with-South-Indians--BJP-s-Tarun-Vijay

இந்தியர்கள் இன பாகுபாடு பார்த்தால் எப்படி தென் இந்தியர்களுடன் சேர்ந்து வாழ முடியும் என பாஜகவின் முன்னாள் எம்.பி. தருண் விஜய் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன்கள் அவரை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்கின்றனர்.


Advertisement

கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நைஜீரிய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் ஆப்பிரிக்க மாணவர்களின் பாதுகாப்பை குறித்த கேள்வியை எழுப்பியது.

இது குறித்து பேசிய இந்திய-ஆப்ரிக்க பாராளுமன்ற நட்பு குழுவின் தலைவரான தருண் விஜய், கருப்பாக இருக்கும் கடவுளான கிருஷ்ணரை வழிபடும் இந்தியர்கள் எப்படி இன பாகுபாடு பார்ப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.


Advertisement

மேலும், இந்தியாவில் இன பாகுபாடு இருந்தால் கருப்பாக இருக்கும் தென் இந்தியகளுடன் நாங்கள் எப்படி சேர்ந்து வாழ முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். தருண் விஜய் இப்படிக் கூறியது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. நாங்கள் என்கிறீர்களே அந்த நாங்கள் யார்.... வடநாட்டில் வாழ்பவர்கள் மட்டும்தான் இந்தியர்களா.... என்று நெட்டிசன்கள் தங்களது பதிவுகளில் சரமாரி கேள்வி கேட்டு வருகிறார்கள்.

தென் இந்தியர்களை தருண் விஜய் கேவலப்படுத்தியுள்ளதாக கூறும் நெட்டிசன்கள் தருண் விஜயின் திருக்குறள் பற்றையும் கேள்வி கேட்டுள்ளனர்.

திருக்குறளை வைத்து தமிழர்களை ஏமாற்றி வந்த தருண் விஜயின் முகமூடி கிழிந்திருப்பதாக கூறியிருக்கிறார் ஒரு ட்விட்டர் பயனாளர். தருண் விஜயின் மோசமான கருத்தை பெரிதுப்படுத்த கூடாது எனவும் சிலர் ட்விட்டரில் கருத்து தெரிவித்தனர்.


Advertisement

தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ள தருண் விஜய், தான் வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement