[X] Close >

“தற்காலிக கூரைகள் அமைக்க தார்ப்பாய் வழங்கப்படும்” - முதல்வர் உத்தரவு

Temporary-roofs-will-be-provided-to-set-up-for-Damaged-House---CM-Edapadi-Palaniswamy

பாதிக்கப்பட்ட வீடுகள் தற்காலிகமாக கூரை அமைத்துக்கொள்ள தார்ப்பாய்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


Advertisement

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலான வீடுகளின் கூரைகள் சேதம் அடைந்துள்ளன. தற்போது பெய்துவரும் வடகிழக்கு பருவ மழையிலிருந்து வீடுகளை பாதுகாப்பதற்காக கூரை மேல் தற்காலிகமாக போடுவதற்கு தார்ப்பாய் ஷீட்டுகள் அளித்தால் உதவிகரமாக இருக்கும் என பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்திருப்பதாக கூறியுள்ளார்.


Advertisement

ஏழை, எளிய மக்களின் நலனில் அக்கறை கொண்டு, கூரைகள் பாதிக்கப்பட்ட வீடுகளில் தற்காலிகமாக கூரை அமைத்துக்கொள்ள தார்ப்பாய் ஷீட்டுகளை முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக உடனடியாக வழங்க சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

கஜா புயல் மற்றும் கனமழை தாக்கத்தினால் முழுவதும் சேதமடைந்த குடிசை வீடு ஒன்றிற்கு 10 ஆயிரம் ரூபாயும், பகுதி சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 4,100 ரூபாயும் வழங்க தாம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தகுதி வாய்ந்த நபர்களுக்கு புதியதாக வீடு கட்ட உரிய நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்திருப்பதையும் முதலமைச்சர் தனது அறிக்கையின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement
Related Tags : தார்ப்பாய்
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close