டி10 தொடரில் ஆப்கானிஸ்தான் வீரர் முமகது சேஷாத் அதிரடியாக விளாசி சாதனை படைத்தார்.
குறுகிய வடிவிலான கிரிக்கெட் தொடரில், டி20 போட்டிகளை அடுத்து, டி10 தொடர் கடந்த ஆண்டு முதல் துபாயில் நடந்து வருகிறது. எட்டு அணிகள் பங்குபெறும் இந்த தொடரில் பல்வேறு நாட்டு முன்னணி வீரர்கள் கலந்துகொண்டு விளையாடுகின்றனர். இந்த ஆண்டுக்கான தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று தொடங்கியது. டிசம்பர் 2 ஆம் தேதி வரை இந்த தொடர் நடக்கிறது.
நேற்று நடந்த லீக் போட்டியில் ஷேன் வாட்சன் தலைமையிலான சிந்தி அணியும் பிரெண்டன் மெக்குலம் தலைமையிலான ராஜ்புத்ஸ் அணி யும் மோதின.
முதலில் ஆடிய சிந்திஸ் அணி, 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்தது. வாட்சன் 42 ரன் குவித்தார். இதையடுத்து ராஜ்புத்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மெக்குலமும் முகமது சேஷாத்தும் (ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் ) கள மிறங்கினார். யாரும் எதிர்பார்க்காத வகையில் சேஷாத், பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து வான வேடிக்கை காட்டினார். அவர், பவுண்டரி, சிக்சர் என தொடர்ந்து வெளுத்து வாங்கினார்.
இதனால், வெறும் 16 பந்துகளில் அவர் 74 ரன்களை குவித்தார். இதில் எட்டு சிக்சர்களும் நான்கு பவுண்டரிகளும் அடங்கும். 12 ரன்களில் அரைச் சதம் அடித்து சாதனைப் படைத்தார். இவரது அபார ஆட்டத்தால் ராஜ்புத்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெறும் 4 ஓவர்களில் இலக்கை அடைந்து அந்த அணி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
அபாரமாக பேட்டிங் செய்த சேஷாத்திடம் பிட்னஸ் குறித்து கேட்டபோது, ‘நான் உடலைக் குறைக்க அதிகமாக பயிற்சி எடுத்துக்கொள்கிறேன். அதே நேரத்தில் உணவு விஷயத்தில் எந்த சமரசமும் செய்துகொள்வதில்லை.
இந்திய வீரர் விராத் கோலி மாதிரி தினமும் பிட்னஸ் பயிற்சி எடுக்கச் சொன்னால் என்னால் முடியாது. ஆனால், முயற்சி செய்கிறேன். விராத் போல சிக்சர் அடிப்பது பற்றி கேட்கிறார்கள். விராத் கோலியை விட எவ்வளவு தூரமாக சிக்சர் அடிக்க வேண்டுமோ, அவ்வளவு தூரமாக என் னால் அடிக்க முடியும். அதனால், அவரை போல் டயட் கடைபிடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை’ என்றார்.
இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் சேஷாத்துக்கும் ஏக வரவேற்பு இருக்குமென்றே தெரிகிறது.
Loading More post
தேமுதிகவுக்கு 13 தொகுதிகள் ஒதுக்க அதிமுக திட்டம்?
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவுக்கு கருணாஸ் ஆதரவு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கேள்வி
அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல்: ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல்?
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை