சென்னையில் விடிய விடிய தொடரும் மழை !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் பரவலாக மழை.


Advertisement

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி கூடுதல் வலுப்பெறும் என்பதால் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தது. 


Advertisement

இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சாலிகிராமம், ராமாபுரம், வளசரவாக்கம், அண்ணாநகர், புரசைவாக்கம், அயனாவரம், புழல், கொரட்டூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

புறநகர் பகுதிகளான அம்பத்தூர் பல்லாவரம், தாம்பரம், அடையாறு, ஒ.எம்.ஆர், இ.சி.ஆர், மேடவாக்கம், அனகாபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. புயல் பாதித்த நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் புயல் பாதித்த நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை தொடர்கிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement