ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியதால் சமூக வலைதள பயன்பட்டாளர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
இன்றைய இளைய தலைமுறையினரின் முக்கியமான ஊடகமாக இருப்பது ஃபேஸ்புக். சமூக வலைத்தளமான இந்த ஊடகம் வந்த பிறகுதான் உலக அளவில் தகவல் பரிமாற்றம் மாபெரும் வளர்ச்சியை அடைந்தது. நாளுக்கு நாள் இதன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகின்றது. தகவல் பரிமாற்றத்தை தாண்டி பல்வேறு பொழுதுபோக்கு விஷயங்களும் இதில் நிரம்பி வழிவதால் இதற்கு பலர் ரசிகர்களாகவே ஆகிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டையும் பலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ஃபேஸ்புக் மாலை 6 மணி முதல் பயன்படுத்துவதில் சிக்கல் நிலவி வருகிறது. இதுதொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஃபேஸ்புக் வலைத்தளத்தை பயன்படுத்துவதில் சில மணி நேரங்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் சரியாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக ஃபேஸ்புக் முடங்கியுள்ளதால் அதன் வாடிக்கையாளர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
We know some people are having trouble accessing the Facebook family of apps. We’re working to resolve the issue as soon as possible.— Facebook (@facebook) November 20, 2018
ஃபேஸ்புக்கை போல், இஸ்டாகிராம் வலைதளமும் முடங்கியுள்ளதாக அதன் வாடிக்கையாளர்கள் கூறியுள்ளார். அதேபோல், ட்விட்டரும் சற்றே மந்தமாக இருப்பதாக கூறப்படுகிறது.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்