பிரபல தாதா சோட்டா ஷகீலின் ஆள் என்று கூறி சல்மான் கான் மற்றும் அவரது தந்தைக்கு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
இந்தி நடிகர் சல்மான் கானிடம் உதவியாளராக பணியாற்றுபவர் நிபாஸ் சாயா. இவரது தொலைபேசிக்கு எண்ணுக்கு சமீபத்தில் ஒரு அழைப்பு வந்தது. எடுத்து பேசினார். எதிர்முனையில் பேசியவர், தான் சல்மான்கானிடம் முக்கியமான விஷயம் தொடர்பாக பேச விரும்புவதாகவும் அவரது செல்போன் நம்பர் வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
உதவியாளர் மறுத்து, போனை துண்டித்துவிட்டார். அந்த நபர் தொடர்ந்து சாயாவுக்கு போன் செய்து சல்மான் கான் நம்பரை கேட்டு நச்சரித்துள் ளார்.
மறுத்த உதவியாளரை கண்டபடி திட்டியுள்ளார். பின்னர் சல்மானை சந்திக்கவிடவில்லை என்றால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். பின்னர் எப்படியோ, சல்மான் கானின் தந்தை சலீம் கானின் எண்ணை பெற்ற அந்த நபர், அவருக்கும் போன் செய்து, சல்மான் கான் எண்ணை கேட்டுள்ளார். அவர் மறுத்ததால், அவரையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.
தான் பிரபல தாதா சோட்டா ஷகீலின் ஆள் என்றும் முக்கியமான விஷயமாக அவரிடம் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் தொடர்ந்து கூறி டார்ச்சர் செய்ததால் பாந்த்ரா போலீசில் சல்மான் கான் உதவியாளர் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், அந்த நபர் அலகாபாத்தில் இருந்து பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செல்போன் நம்பரை வைத்து சம்பந்தப்பட்ட நபரை போலீசார் அமுக்கினர். அவர் பெயர் நபி என்ற ஷேரா (24) என்பது தெரிய வந்தது. அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், எதற்காக சல்மான் கானை தொடர்பு கொள்ள முயன்றார். சோட்டா ஷகீல் பெயரை ஏன் பயன்படுத்தினார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்
''தமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை'' - பிரதமர் மோடி
கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மு.க.ஸ்டாலின்: விருப்ப மனு தாக்கல்!
தமிழகத்தில் 2020ம் ஆண்டில் ரயில் விபத்து மரணங்கள் 57% குறைவு - ரயில்வே காவல்துறை
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி