புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக நாளை முதல் தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களுக்கு சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்து 24 மணி நேரத்தில் சற்று வலுப்பெறும் என தெரிவித்துள்ளார். இது புயலாக மாற வாய்ப்பில்லை என்றாலும், இதன் காரணமாக நாளை கடலோர மாவட்டங்களில் மழை தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
வடகடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் தென்கடலோர மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என கூறினார். 20ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் பரவலாக மழை பெய்யும் என கூறிய அவர், தென்கிழக்கு, தென்மேற்கு வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் இன்று லேசான மழை பெய்யும் என்றும் நாளை மற்றும் நாளை மறுதினம் மிதமான மழை பெய்யும் என்றும் கூறியுள்ளார்.
Loading More post
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!