JUST IN

Advertisement

பரபரப்பு பேச்சும் ரஜினிகாந்த் இயல்பும்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சினிமாவிலும் சரி, நிஜவாழ்க்கையிலும் சரி பரபரப்பாக பேசுவது ரஜினிக்கு ஒன்றும் புதிது இல்லை. ஏனென்றால், அவர் ஒரு தடவை சொன் னா... அது பல லட்சம் ரசிகர்களை ஈர்க்கும்! அப்படி பேசுவது அவரது இயல்பு என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அவர் பேச்சை அப்போதைய அரசியல் தலைவர்களும் எதிர்பார்த்தார்கள், இப்போதைய தலைவர்களும் எதிர்பார்க்கிறார்கள்.  ‘மன்னன்’,   ‘படையப்பா’,   ‘அண்ணாமலை’ போன்ற படங்களில் அவர் மறைமுகமாக யாரை எதிர்த்தார் என்பது தமிழக ரசிகர்கள் அறிந்ததுதான்.


Advertisement

அவர் நடித்த ’பாட்ஷா’ படத்தின் வெள்ளி விழாவில்தான் முதன்முறையாக பொங்கி எழுந்தார் ரஜினி. அந்த விழாவுக்கு சில நாட்களுக்கு முன் தான் இயக்குனர் மணிரத்னம் வீட்டில் குண்டு வெடித்திருந்தது. அன்றைய அவரது பேச்சு பரபரப்பாகப் பேசப்பட்டது. எப்போதும் அரசியலையும் ஆட்சியாளர்களையும் வெளிப்படையாக பேசாத ரஜினி, அன்று அதிரடியாகத் தாக்கிப் பேசினார். ’வெடிகுண்டு கலாசாரம் பெருகிவிட்டது’என்றார். அப்போது அவருக்கு ஆதரவு பெருகியது. இதையடுத்து நடந்த ஆட்சி மாற்றத்துக்கு ரஜினியின் பேச்சும் காரணமாக அமைந்தது. இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு அதிரடி பேச்சு, அவரிடம் இருந்து வெளிப்பட்டிருக்கிறது. அது பல சர்ச்சையையும் ஏற்படுத்துவது வழக்கமானதுதான். ’எதையும் அவர் இயல்பாகவே பேசுகிறார், தேவையில்லாமல் சர்ச்சையாக்குகிறார்கள்’ என்று சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.


Advertisement

அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய அஜீத், ’நிகழ்ச்சிகளுக்கு நடிகர்கள் கட்டாயம் வந்தே தீர வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். காவிரி பிரச்சனை போன்ற பிரச்சனைகளுக்கு நடிகர்கள் வந்து போராட வேண்டும் என்று
மிரட்டுகிறார்கள். எனக்கு அரசியல் ஆசை இல்லை. நடிகர்களுக்கு வரும் மிரட்டல்களை முதல்வர்தான் தீர்க்க வேண்டும்’ என்று வேண்டுகோள் வைத்தார். இந்தப் பேச்சுக்கு எழுந்து நின்று கைதட்டினார் ரஜினிகாந்த். இது பரபரப்பை ஏற்படுத்தியது அப்போது.

சென்னையில் நடந்த தமிழ் சினிமா நூற்றாண்டு விழாவில் பேசிய ரஜினி, ஜெயலலிதாவை மேடையில் வைத்துக்கொண்டே, ‘இந்த விழாவுக்கு கருணாநிதியை அழைத்திருக்க வேண்டும்’ என்று பேசி பரபரப்பாக்கினார். இதை எதிர்பார்க்காத அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


Advertisement

கடந்த வருடம் மாவட்ட வாரியாக ரசிகர்களை சந்தித்து வந்தார் ரஜினி. அப்போது பேசிய, ரஜினி, ’நான் முதல் நாள் கூட்டத்தில் அரசியலுக்கு வருவது பற்றியும் ரசிகர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் பேசியிருந்தேன். அந்தப் பேச்சு குறித்து சமூக
வலைத்தளங்களில் கடுமையாக பலர் விமர்சித்திருந்தனர். விமர்சனம் வேண்டாம் என கூறவில்லை. ஆனால்  ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக இருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கின்ற சிஸ்டம் சரிவர இயங்கவில்லை?’ என்று அதிரடி கொடுத்தார். இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், ‘எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்’ என்றார் பரபரப்பாக. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நடந்த துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர். அவர்களை பார்க்கச் சென்று திரும்பிய ரஜினி, அளித்த பேட்டியில், தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததாலேயே வன்முறை வெடித்ததாக தெரிவித்திருந்தார். இந்தப் பேச்சும்
சர்ச்சையானது. ஆனால், தனது கருத்தில் உறுதியாக இருந்தார் ரஜினி. அவருக்கு கண்டனங்கள் குவிந்தன. வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டன.

சமீபத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்ளாத முதலமைச்சர் பற்றி குறிப்பிட்டு, ’கலைஞரின் இறுதி அஞ்சலிக்கு எல்லா அரசியல் தலைவர்களும் வந்திருக்கும்போது தமிழக
முதலமைச்சர் வந்திருக்க வேண்டாமா? நீங்கள் என்ன எம்.ஜி.ஆரா, ஜெயலலிதாவை விட பெரிய தலைவர்களா? என்று கேட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை போல நேற்று, யார் அந்த 7 பேர்? என கேட்டிருக்கிறார் ரஜினி. இதுவும் பெரும் சர்ச்சையாக மாற, இன்று காலை விளக்கம் கொடுத்திருக்கிறார். ரஜினிகாந்தின் தன்னை இன்னும் முழு அரசியல்வாதியாக உணரவில்லை. சாதாரண மக்களின் எண்ணத்தையே
அவரது பேச்சுகள் வெளிப்படுத்துகின்றன.  அவர்கள் என்ன நினைப்பார்களோ, அதைதான் அவரது பேச்சும் பிரதிபலிக்கிறது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement