JUST IN

Advertisement

பாஜகவே பலசாலி - ரஜினிகாந்த் சூசகம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

7 பேர் விடுதலை, பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த நேற்றைய பேட்டி குறித்து ரஜினிகாந்த் இன்று விளக்கம் அளித்துள்ளார்.


Advertisement

சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். 7 பேர் விடுதலை குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘எந்த 7 பேர் ? அது பற்றி எனக்கு தெரியாது’ என்று ரஜினி பதில் அளித்தார். அதேபோல், பாஜகவுக்கு எதிரான பல்வேறு கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைப்பதால், பாஜக ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு ரஜினி பதில் அளித்திருந்தார். இதனையடுத்து, எந்த 7 பேர் என்று ரஜினி சொன்னது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. 

இந்நிலையில், ரஜினி காந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லம் முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன் மீதான விமர்சனங்களுக்கு அவர் விளக்கம் அளித்தார். 


Advertisement

பாஜக ஆபத்தான கட்சியா?

Read Also -> அந்த 7 பேரை தெரியாத அளவிற்கு முட்டாள் அல்ல - ரஜினிகாந்த் பேட்டி

         


Advertisement

எதிர்க்கட்சிகளுக்கே பாஜக ஆபத்தான கட்சி என்று நான் பதில் சொன்னேன். பாஜக ஆபத்தான கட்சியா என்று மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். பாஜக ஆபத்தான கட்சியா என்பது குறித்து நான் இப்போது கூற முடியாது. ஏனெனில் நான் இன்னும் முழுமையாக அரசியலில் இறங்கவில்லை. அன்றாட நிகழ்வுகள் குறித்து கருத்து சொல்ல மாட்டேன் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேன். திரும்பவும் சொல்கிறேன். கட்சி தொடங்கிய உடன் அனைத்து கேள்விகளுக்கும் தொடர்ச்சியாக பதில் அளிப்பேன். 

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைப்பது?

“10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள் என்றால் யார் பலசாலி என்று நீங்கள் சொல்லுங்கள்? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 

பாஜக உடன் கூட்டணி வைப்பீர்களா? 

தேர்தல் வரும் போது பார்த்துக் கொள்ளுங்கள்

பிரதமர் நரேந்திரமோடி பலசாலியா?

மக்கள் தான் அதனை முடிவு செய்ய வேண்டும்

Read Also -> பயணியின் பைக்குள் ஊர்ந்த விஷப் பாம்பு: விமான நிலையத்தில் திடீர் பரபரப்பு!  

7 பேர் விடுதலை குறித்த நிலைப்பாடு?  

“பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை பற்றி எனக்கு தெரியாத அளவிற்கு தான் முட்டாள் அல்ல. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் பற்றி எனக்கு தெரியாது என்ற மாயையை சிலர் உருவாக்கி வருகின்றனர்; கேள்வியை தெளிவாக கேட்டிருந்தால் பதிலளித்திருப்பேன். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் விடுதலை என்று கேட்டிருந்தால் புரிந்திருக்கும். வெறும் 7 பேர் விடுதலை என்று கேட்டதல் எனக்கு புரியவில்லை. பேரறிவாளன் பரோலில் வெளிவந்த போது அவரிடம் தொலைபேசியில் பேசினேன். மனிதாபிமான அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து” என்று கூறினார். 

வீடியோ :

 

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement