கோடையில் மிரட்ட வரும் ’காஞ்சனா 3’ !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

'காஞ்சனா 3' படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது என்றும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் இந்தப் படம் ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.


Advertisement

நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குனராக அறிமுகமாகிய படம் ’முனி’. 2007 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் அவருடன் வேதிகா, ராஜ் கிரண், வினு சக்கரவர்த்தி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வரவேற்பை பெற்றதை அடுத்து, இதன் அடுத்த பாகத்தை ’காஞ்சனா’ என்ற பெயரில் இயக்கினார். அவருடன் சரத்குமார், லட்சுமி ராய், கோவை சரளா நடித்த இந்தப் படம் பட்டித் தொட்டியெங்கும் ஹிட்டானது.

Read Also -> கலிபோர்னியா தீ விபத்து: வீடுகளை இழந்த ஹாலிவுட் பிரபலங்கள்!


Advertisement

இதையடுத்து இதன் அடுத்த பாகத்தை காஞ்சனா 2 என்ற பெயரில் எடுத்தார். இந்தப் படத்தில் டாப்ஸி, நித்யா மேனன் ஆகியோர் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தனர்.  2015 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மெகா ஹிட் ஆனது. வசூலிலும் சாதனை படைத்தது.

இதையடுத்து ராகவா லாரன்ஸ், நாகா என்ற படத்தை இயக்குவதாக இருந்தது. அதற்கான அறிவிப்பும் வெளியானது. ஆனால், அந்த படம் தொடங்கப்படவில்லை. வேறு சில படங்களில் நடிக்கத் தொடங்கினர்.


Advertisement

Read Also -> சூப்பர் ஹீரோ கேரக்டர்களை உருவாக்கிய ஸ்டேன் லீ காலமானார்!

பின்னர், கஞ்சனா 3 படத்தை அவர் அறிவித்தார். ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கியது. இதில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக வேதிகா, ஓவியா நடித்துள்ளனர். மற்றும் கோவை சரளா, மனோபாலா, ஸ்ரீமன், சத்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.தமன் இசை அமைக்கிறார். 

Read Also -> கேரளாவில் நடிகர் விஜய் மீது வழக்குப் பதிவு ! 

இந்நிலையில் இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது. ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி உள்ளது. பிரமாண்டமான செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 18 ம் தேதி இந்தப் படம் திரைக்கு வர உள்ளது. 

’காஞ்சனா 2’ படம் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement