தொடங்கியது ‘இந்தியன் 2’ படத்திற்கான செட் வேலைகள் 

Set-work-for-Kamal-Haasan-s-Indian-2-started

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாக இருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் செட் அமைக்கும் வேலைகள் பூஜையுடன் தொடங்கப்பட்டது.


Advertisement

கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கிய ‘இந்தியன்’  படம்  1996 ஆம் ஆண்டு வெளியானது. ஊழலை ஒழிப்பது குறித்து இப்படத்தின் கதை அமைந்திருந்தது. கமல் இருவேடங்களில் நடித்த இந்தப் படம் மூன்று தேசிய விருதுகளை பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதை கமல் பெற்றார். 


Advertisement

இந்நிலையில், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் முதல் சீசனில், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மற்றும் தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகியோர் ‘இந்தியன் 2’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். 

ஆனால் ‘விஸ்வரூபம்’ படத்தில் கமலும் ‘2.0’ படத்தில் ஷங்கரும் பிஸியாக இருந்ததால் ‘இந்தியன்2’ படத்தின் பணிகள் காலதாமதமாகியது. இதையடுத்து இப்படத்தின் தயாரிப்பாளராக இருந்த தில் ராஜூ இப்படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பு வெளியிட்டார். பின்னர், ‘2.0’ தயாரிப்பு நிறுவனமான ‘லைக்கா புரொடக்ஸன்ஸ்’ ‘இந்தியன்2’ படத்தை தயாரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. 


Advertisement

இந்நிலையில், தற்போது, ‘இந்தியன்2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாகவும் ஆனால் திரைப்படம் 2020 ஆம் ஆண்டில்தான் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்திற்கான செட் அமைக்கும் பணி இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டது. ‘இந்தியன்2’ படத்தின் கலை இயக்குநர் முத்துராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement