இணையத்தில் கசிந்தது ‘விவோ ஒய்95’ தகவல்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

‘விவோ’ செல்போன் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ‘ஒய்95’ மாடலின் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.


Advertisement

‘விவோ’ நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில் விவோ ‘ஒய்93’ மாடல் ஸ்மார்ட் வெளியானது. அதில் 4 ஜிபி ரேம், 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் ஆகியவை வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் 6.2 இன்ஞ் ஹெச்.டி டிஸ்ப்ளே இருந்தது. பின்புறத்தில் இரட்டைக் கேமராவும், முகத்தை ஸ்கேன் செய்து அன்லாக் செய்யும் வசதியும் இருந்தது. இதைத்தொடர்ந்து விவோ ‘ஒய்95’ மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் அதற்குள் அதன் புகைப்படம் மற்றும் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன. 


Advertisement

6.2 இன்ஞ் டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரவுள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 அல்லது 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மைக்ரோ சிப் வேண்டுமானல் பொறுத்திக்கொள்ளலாம். பின்புறத்தில் 19 எம்பி (மெகா பிக்ஸல்) மற்றும் 2 எம்பி என இரட்டைக் கேமராவும், முன்புறத்தில் 20 எம்பி செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியாகிவுள்ள ஒய்53 மாடலில் ஃபிங்கர் பிரிண்ட் ஆப்ஷன் இல்லாத நிலையில், ஒய்55 மாடலில் அந்த வசதியும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன் 4,030 எம்ஏஎச் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement