தருமபுரியில் பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தருமபுரி பாப்பிரெட்டிபட்டியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி தீபாவளிக்காக தனது ஊருக்கு வந்துள்ளார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த சதீஷ், ரமேஷ் என்ற இரண்டு இளைஞர்கள் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து காவல்துறையினரிடம் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலைகழித்ததாக அவரது பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி 5 நாட்களுக்குப் பிறகு மாணவி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட சதீஷ், ரமேஷ் ஆகிய இருவரும் தலைமறைவாகினர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சதீஷ் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவருடன் இணைந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்ட ரமேஷ் என்பவரை காவல்துறையினர் தேடி வந்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த ரமேஷ், சேலம் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார்.
இதற்கிடையே விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தருமபுரி மாவட்டம், சிட்லிங் மலைக்கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையும், கடந்தவாரம் சேலம் மாவட்டத்திலும் 13 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்படிருப்பதையும் தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு உச்சபட்ச தண்டனையான தூக்கு தண்டனையை வழங்கினால்தான், இனிவரும் காலங்களில் இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்