ஐபிஎல் த்ரில்லிங்கை இதில் பார்த்தேன்: ரோகித் சர்மா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் த்ரில்லிங்கை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி போட்டியில் கண்டேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.


Advertisement

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வந்தது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டித் தொடரை கைப்பற்றிய நிலையில் டி20 தொடரில் பங்கேற்றது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரையும் 2-0 என்ற நிலையில் இந்திய அணி கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் கடைசி போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்தது.

Read Also -> கேக்கில் மிக்ஸியும் கிரைண்டரும் ! சர்கார் வெற்றியை கொண்டாடிய படக்குழு 


Advertisement

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிகோலஸ் பூரான், பிராவோவின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது. இந்திய அணி தரப்பில் சேஹல் 2 விக்கெட் சாய்த்தார். வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட் எடுத்தார்.

Read Also -> நடிகை சிரிண்டா இரண்டாவது திருமணம்: இயக்குனரை மணந்தார்!


Advertisement

இதனையடுத்து, 182 ரன் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியில் ரோகித் சர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து கே.எல்.ராகுல் 17 ரன்னில் அவுட் ஆனார். 45 ரன்னிற்குள் இந்திய அணி 2 விக்கெட்களை இழந்தது. இதனையடுத்து, தவானுடன், ரிஷாப் பன்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துவீச்சை அடித்து விளையாடினர். தவான் 36 பந்திலும், பன்ட் 30 பந்திலும் அரைசதம் விளாசினர். பன்ட் 38 பந்தில் 58 ரன் அடித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். அவர் 3 சிக்ஸர்களை விளாசினார்.

Read Also -> புற்றுநோய் அனுபவம்: புத்தகமாக்கினார் மனிஷா கொய்ராலா 

19வது ஓவரில் பன்ட் அவுட் ஆன பின்னர், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி ஓவரில் 5 ரன் எடுக்க வேண்டியிருந்தது. முதல் பந்தில் 2 ரன் எடுத்த தவான், அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது பந்தில் மணீஷ் பாண்டே ஒரு ரன் எடுத்தார். இதனையடுத்து, 4-வது பந்தில் ரன் ஏதும் எடுக்காத தவான், 5வது பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். 62 பந்தில் அவர் 92 ரன் எடுத்தார். இதனால், கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், ஆட்டத்தில் பதட்டம் தொற்றிக் கொண்டது.

கடைசி பந்தில் பாண்டே ஒரு ரன் எடுக்க, இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. 
அதே போல், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர் அனைத்தையும் முழுமையாக இந்திய அணி கைப்பற்றி யது.  92 ரன்கள் குவித்த ஷிகர் தவான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். குல்தீப் யாதவ் தொடர் நாயகன் விருது பெற்றார்.

பின்னர் கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது, ‘இது போன்ற த்ரில்லிங் டி20 போட்டிகளில் நடப்பதுதான். குறிப்பாக ஐபிஎல் போட்டியில் இது போன்ற பரபரப்பு இருக்கும். அதே போன்று இந்த போட்டி அமைந்தது. எங்கள் வீரர்களின் இதுபோன்ற ஆட்டத்திறன் அதிக நம்பிக்கையை கொடுக்கிறது. நாங்கள் முந்தையை வெற்றிகளின் மூலம் மனநிறைவு கொள்ளவில்லை. வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று விளையாடி னோம். ஓர் அணியாக நாங்கள் முன்னேற வேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது. அழுத்தமான சூழ்நிலைகளில் எங்கள் பந்துவீச்சை மேம்படுத் த வேண்டியதும் அவசியம். அது அணிக்கு முக்கியம். அணியில் விளையாடிய சிலர் இந்தியாவுக்காக அதிகம் விளையாடியதில்லை. அதனால் இதுபோன்ற போட்டிகள் அவர்கள் திறமையை வெளி கொண்டுவருவதற்கு சரியான வாய்ப்பு. இந்த தொடரில் எங்கள் அணியில் பீல்டிங்கும் மன நிறைவை தந்தது’ என்றார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement